Homeசெய்திகள்சினிமாஅனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்

அனிருத்தின் இசையை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள்

-

தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இசை அமைப்பாளர்கள் உள்ளனர். அதில் முன்னணி இசையமைப்பாளர்களா சிலரே ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இசை எனும் உலகில் முடிசூட மன்னராக வலம் வருகிறார் ராக்ஸ்டார் அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். விஜய், அஜித்,ரஜினி, கமல், கார்த்தி, சிவகார்த்திகேயன், என அடுத்தடுத்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், தங்க மகன், ரெமோ, என ஆண்டிற்கு அவரது இசையில் கிட்டத்தட்ட 10 படங்களாவது வெளியாகிவிடும். தற்போது லோகேஷ் இயக்கத்தில் விக்ரம், மாஸ்டர், லியோ, அடுத்து தலைவர்171 படத்திற்கும் அவர் இசை அமைக்கிறார். தமிழில் உச்சம் தொட்ட ராக்ஸ்டார் அனிருத், தெலுங்கு, இந்தி என பல மொழிகளுக்கும் இசையமைக்க தொடங்கி இருக்கிறார்.

ஆனால், தொடக்கத்தில் யாரின் திரைப்படத்தின் வழியாக சினிமாவிற்கு அறிமுகமானாரோ, அவர்களின் திரைப்படத்திலேயே அனிருத் புறக்கணிக்கப்படுகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் அண்மைக் காலமாக அனிருத் இசை அமைப்பதில்லை. லால் சலாம், கேப்டன் மில்லர், அடுத்து தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்திலும் அவர் இசை அமைக்கவில்லை, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இடையே ஏற்பட்ட விரிசல் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

MUST READ