ஹர்காரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையாக அருக்காரா திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை V1 மர்டர் கேஸ் திரைப்படத்தில் நடித்திருந்த ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். இப்படத்தை கலர்ஃபுல் பீட்டா மூமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராம் சங்கர் இசையமைத்துள்ளார்.
செல்போன் போன்ற எந்த வித டிஜிட்டல் வசதிகளும் ஊடுருவாத காலகட்டத்தில், மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை சொல்லும் கதையாகவும், அந்த மலை கிராமத்திற்கு செல்லும் ஒரு தபால்காரன் படும் கஷ்டங்களை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் கான்செப்ட் டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
#Harkara trailer from Aug14th pic.twitter.com/DZSO6GjxDd
— Kaali Venkat (@kaaliactor) August 12, 2023
மேலும் சமீபத்தில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் வருகின்ற 14ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.