ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற ஆதி அதையடுத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தார். தற்போது நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது ஹிப்ஹாப் ஆதி ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குனர் ஏஆர் சரவணன் இயக்கத்தில் வீரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆதியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஃபேன்டஸி காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி வீரன் திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படமும் ஆதிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.