Homeசெய்திகள்சினிமா‘100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?’... செய்தியாளர் கேட்ட கேள்வி: நைஸாக எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்!

‘100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?’… செய்தியாளர் கேட்ட கேள்வி: நைஸாக எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு நடந்தபடியே பதிலளித்துச் சென்ற ரஜினிகாந்த், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும், கமல் உடனான கூட்டணி குறித்தும் சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.‘100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?’... செய்தியாளர் கேட்ட கேள்வி: நைஸாக எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்!

‘ஜெயிலர் 2’ நிறைவு & புதிய படங்கள் குறித்த அப்டேட்
திரைப்படம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

we-r-hiring

மேலும் தொடர்ந்த அவர், “இந்த ‘தர்மன்’ திரைப்படத்தை நண்பர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நானும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறோம், அவ்வளவுதான்” என்று தனது அடுத்தடுத்த திரைப் பயணங்கள் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தினார்.

அரசியல் கேள்வியை தவிர்த்த ரஜினி
திரைப்படங்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் அவரிடம், “தமிழக முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி எவ்வாறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்வியை எதிர்கொண்ட ரஜினி, அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல், “அனைவருக்கும் நன்றி” எனக் கூறியவாறே புன்னகையுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.

முன்னதாக, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், பின்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தாம் ஏற்கனவே விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டதாகத் தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், சமீபகாலமாக அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதை ரஜினிகாந்த் தொடர்ச்சியாகத் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

MUST READ