- Advertisement -
இன்ஸ்டாகிராமில் 30 வினாடி வீடியோவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் அமலா சாஜி.
பிரபல சமூக வலைதப்பக்கமான இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்நிலையில், அரணம் என்ற திரைப்படத்தில் நடனமாட அமலா சாஜி இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தின் நாயகன் பிரியன் மேடை விழாவில் பேசி இருக்கிறார். இவர் ‘மஸ்காரா போட்டு மயக்குறியே’, ‘மக்காயாலா’ போன்ற பல ஹிட் எழுதியவர் ஆவார். இவர் தற்போது அரணம் என்ற படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது அவர் அமலா சாஜி குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது, கேரளாவில் நடனமாடும் பெண் ஒருவர் 2 லட்சம் சார் என்றார். ஏன் எனக் கேட்டேன். அதற்கு அவர் 30 வினாடி சார். என்றார். இதற்கு 2 லட்சமா? இதை எங்கள் கலைஞரிடம் கொடுத்தால் விடிய விடிய வேலை பார்ப்பார்கள். அவர் வேறு யாருமில்லை நம்ம அமலா ஷாஜிதான் என்று தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
Amala Shaji has worked hard to get her millions of followers . You go to her because you need publicity . If you are ok with the numbers , you get the deal done , if not – just walk away . What is the need to mention it here ? pic.twitter.com/PJYrFFtQsV
— Prashanth Rangaswamy (@itisprashanth) December 20, 2023