Homeசெய்திகள்சினிமாசத்யராஜ், சிபிராஜ் கூட்டணியின் ஜாக்சன் துரை 2..... ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சத்யராஜ், சிபிராஜ் கூட்டணியின் ஜாக்சன் துரை 2….. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

ஜாக்சன் துரை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜாக்சன் துரை. தரணிதரன் இயக்கியிருந்த இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு ஜாக்சன் துரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ஐ ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரிக்க தரணிதரனே இந்த படத்தையும் இயக்குகியுள்ளார். இதில் சத்யராஜ், சிபிராஜ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் ஜாக்சன் துரை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சத்யராஜ் பிரிட்டிஷ்காரர் போல் உடை அணிந்து இருக்கிறார். அவரின் பின்னால் இடது பக்கம் சிபிராஜ் குதிரையில் வருவது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் கார் ஒன்று இருக்கிறது. மேலும் சுதந்திரப் போராட்டத்திற்கு முன் உள்ள காலகட்டத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது இது ஜாக்சன் துரை முதல் பாகத்தில் தொடர்ச்சியான கதையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இது சத்யராஜின் 250 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ