Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!

-

- Advertisement -

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. 'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!அதே சமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் நயன்தாரா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அடுத்ததாக பிரேமலு பட நடிகர் நஸ்லேன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தகவல் வெளிவந்தது.'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!இது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விடாமுயற்சி படம் முழுவதும் முடிந்த பின்னர் ஜப்பானில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படக்குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சுனில் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் ஜெயிலர் பட நடிகர்!

நடிகர் சுனில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோரின் கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனில். தற்போது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ