தனுஷின் ராயன் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி…
- Advertisement -
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தன் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் டாப் நடிகர் தனுஷ். தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். தமிழில் ராயன் படத்தில் நடித்திருக்கும் தனுஷ், தெலுங்கில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். நடிப்பைத் தாண்டி தற்போது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தனுஷின் இயக்கத்தில் வௌியான முதல் படத்திற்கு கிடைத்த வெற்றி, அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அந்த வகையில், தனுஷ் இயக்கி நடித்திருக்கும் புதிய திரைப்படம் ராயன். இது தனுஷின் 50-வது படமாகும். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தனுஷூடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அவ்வப்போது வௌியாகி வருகின்றன. இந்நிலையில், ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் 26-ம் தேதி வௌியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் ஜூனில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது.