spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅம்பானி மருமகளுக்கு விருந்து வைத்த ஜான்வி கபூர்

அம்பானி மருமகளுக்கு விருந்து வைத்த ஜான்வி கபூர்

-

- Advertisement -
அம்பானி வீட்டுக்கு மருமகள் ஆகப்போகும் ராதிகா மெர்ச்சன்டுக்கு, நடிகை ஜான்வி கபூர் அசத்தலான விருந்து ஒன்றை வைத்துள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரரும், ஆசியாவின் நட்சத்திர முகமுமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான இவருக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்களும், ஈஷா அம்பானி என ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு நிச்சயம் நடைபெற்று முடிந்தது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.

we-r-hiring
இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஜாம் நகரில் 3 நாள் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அம்பானி வீட்டு வருங்கால மருமகளுக்கு நடிகை ஜான்வி கபூர், அசத்தலான பேச்சுலர் பார்ட்டி வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது அக்கா இஷா அம்பானி, ஜான்வி கபூர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். மற்றவர்கள் அனைவரும் பிங்க் நிற ஆடை அணிந்திருக்க ராதிகா மட்டும் வௌ்ளை உடையில் இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ