spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜீவாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.... புதிய படத்தின் டைட்டில் என்ன?

ஜீவாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்…. புதிய படத்தின் டைட்டில் என்ன?

-

- Advertisement -

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து வந்தவர். அதன் பின் கடந்த 2017 இல் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.ஜீவாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.... புதிய படத்தின் டைட்டில் என்ன? அதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து மான்ஸ்டர், ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே, யானை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஷாலின் ரத்னம் படத்திலும், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் அடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.ஜீவாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.... புதிய படத்தின் டைட்டில் என்ன? இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்திற்கு ப்ளாக் (BLACK) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

நடிகர் ஜீவா கடைசியாக மம்மூட்டியுடன் இணைந்து யாத்ரா 2 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ