Homeசெய்திகள்சினிமாஇளைஞர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற கோ.... இன்று மறுவெளியீடு...

இளைஞர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற கோ…. இன்று மறுவெளியீடு…

-

கேவி ஆனந்த் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த கோ திரைப்படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கேவி ஆனந்த். பல டாப் நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் கேவி ஆனந்தின் திரைப்படம் பல கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசியிருக்கிறது. அந்த வகையில் கேவி ஆனந்தின் திரைவரிசையில் மாபெரும் ஹிட் அடித்து வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ. இத்திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். அஜ்மல், கார்த்திகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அரசியல் அரங்கிற்கு செல்வதிலும், சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதிலும், இளையர்களின் பங்கு தொடர்பாக அந்தப் படம் விளக்கியது. விறுவிறுப்பான திரைக்கதையும், கதாபாத்திர நுணுக்கங்களும் படம் முழுக்க பேசப்பட்டன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வௌியான அனைத்துபாடல்களும் ஹிட் அடித்தன. இதில் என்னமோ ஏதோ பாடல் பலரின் விருப்பப் பாடல் ஆகும்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், கோ திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது. அண்மைக் காலமாக ஹிட் படங்கள் அனைத்தும் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கோ திரைப்படமும் இன்று திரையரங்குளில் ரி ரிலீஸ் ஆகியுள்ளது.தமிழகம் மட்டுமன்றி கர்நாடகாவிலும் இப்படம் வெளியாகி உள்ளது. அன்று போல் இன்றும் ரசிகர்கள் படத்தை காண ஆவலோடு செல்கின்றனர்.

MUST READ