Homeசெய்திகள்சினிமாஜோஸ்வா சிறு பேராசை... புதிய பாடல் வெளியீடு...

ஜோஸ்வா சிறு பேராசை… புதிய பாடல் வெளியீடு…

-

நாளை வெளியாக உள்ள ஜோஸ்வா இமைபோல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா இயக்குனர்களில் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஸ் இயக்குனர். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கௌதம் மேனன், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இரண்டாவது படத்தில் சூர்யாவுக்கு காக்கி மாட்டி அதிரடி காட்டினார். தாறுமாறு ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தில், தோட்டாக்கள் பாயும் அதே வேகத்தில் காதலையைும் பாய்ச்சி கரை புரள செய்தார் கவுதம்.

காதலை பல பரிமாணங்களில் சொன்ன கவுதமுக்கு, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு பென்ச்மார்க். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனனின் திரைவாழ்வில் அனைத்தும் ஏறுமுகம் தான். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோஸ்வா இமை பால் காக்க. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்தில் வருண் நாயகனாக நடித்திருப்பார். கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படத்திலிருந்து ஜோஸ்வா சிறு பேராசை என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

MUST READ