spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய படம்..... இயக்குனர் யார் தெரியுமா?

கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய படம்….. இயக்குனர் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியான கல்கி 2898AD திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதே சமயம் இந்தியன் 2 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய படம்..... இயக்குனர் யார் தெரியுமா?இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் அட்லீ, இந்தியன் 2 ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசனை இயக்க விரும்புவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவர் பாலிவுட்டிலும் நுழைந்து ஸ்டார் நடிகர் ஷாருக்கானை இயக்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அட்லீ இயக்கி இருந்த ஜவான் திரைப்படம் கிட்டத்தட்ட 1100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அட்லீ, அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படமானதை கைவிடப்பட்ட நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சல்மான் கான் கூட்டணியில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய படம்..... இயக்குனர் யார் தெரியுமா?அதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்திருந்தன. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் என்று புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அட்லீ, கோலிவுட் மற்றும் பாலிவுட் ஹீரோக்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ