Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசனின் தேவர் மகன்

ரீ ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசனின் தேவர் மகன்

-

கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கு ஆரம்ப புள்ளி வைத்தது விஜய்யின் கில்லி திரைப்படம் தான். இத்திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டாலும் படம் வசூலை வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் பெரும் ஹிட் அடித்த பில்லா, தீனா மற்றும் மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.

தொடர்ந்து விஜய்யின் சச்சின், பில்லு, ரஜினிகாந்தின் படையப்பா ஆகிய திரைப்படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் தேவர்மகன் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். பரதன் இயக்கத்தில் இளையராஜா இசை அமைப்பில், 1992-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவர் மகன். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து, சிவாஜி கணேசன், ரேவதி, நாசர், வடிவேலு, கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் வகையிலான திரைப்படம் இது.

மண் மணம் மாறாமல் வெளியான இத்திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படுகிறது. இத்திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

MUST READ