- Advertisement -
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசங்கர், எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டு உள்ளது. அண்மையில் சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு அடைந்தததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு சில காட்சிகளுக்காக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

