Homeசெய்திகள்சினிமாசோலோவாக ரிலீஸாகும் 'கங்குவா'.... விரைவில் புதிய தேதி அறிவிப்பு!

சோலோவாக ரிலீஸாகும் ‘கங்குவா’…. விரைவில் புதிய தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.சோலோவாக ரிலீஸாகும் 'கங்குவா'.... விரைவில் புதிய தேதி அறிவிப்பு!

நடிப்பின் நாயகன் சூர்யாவின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சோலோவாக ரிலீஸாகும் 'கங்குவா'.... விரைவில் புதிய தேதி அறிவிப்பு!அதுமட்டுமில்லாமல் இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே பட குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலும், டிரைலரும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனவே சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சோலோவாக வெளியிட வேண்டுமென படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆகையினால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 அல்லது நவம்பர் 15ஆம் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ