- Advertisement -
நடிகர் கவின், டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்று தலைபிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
கவின், டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.