spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கவின்.... வெளியான புதிய தகவல்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கவின்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் கவின், தென்னிந்திய திரை உலகின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவர் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இதை தொடர்ந்து கவிதை தேடி பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளநீ இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதைசமயம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நெல்சன் தயாரிப்பில் நடிகர் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். அதன் பிறகு நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கிடையில் கவினை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ