spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒத்திவைக்கப்பட்ட 'கிங் ஆஃப் கோத்தா' ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

பிரபல இயக்குனரின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கிங் ஆஃப் கோத்தா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்தியா நடிகரான துல்கர் சல்மான் அபிலாஷ் ஜோசி இயக்கத்தில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் ,சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

we-r-hiring

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது.
அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசர் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பிரபல இயக்குனர் சித்திக்கின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த ட்ரெய்லர் நாளை காலை 10 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ