spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கிங்ஸ்டன்' படத்தின் புதிய அறிவிப்பு!

‘கிங்ஸ்டன்’ படத்தின் புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

கிங்ஸ்டன் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.'கிங்ஸ்டன்' படத்தின் புதிய அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த படமானது ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. அதன்படி இப்படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படம் ஆகும். இதனை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தினை தயாரித்து அதற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார். மேலும் சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மார்ச் 7 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.'கிங்ஸ்டன்' படத்தின் புதிய அறிவிப்பு! இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ‘ராசா ராசா’ எனும் பாடலையும் ‘மண்ட பத்திரம்’ எனும் பாடலையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ட்ராக்-Title Song இன்று (மார்ச் 1) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ