spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.'ஜெயிலர் 2' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.'ஜெயிலர் 2' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது? அதிலும் ரஜினி- நெல்சன் – அனிருத் காம்போ பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. எனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ‘கூலி’ படத்திற்காக ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு பிரேக் விடப்பட்டிருந்தது. இதற்கிடையில் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் இணைய இருப்பதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, தன்னுடைய ‘கில்லர்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைய உள்ளாராம். 'ஜெயிலர் 2' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?மேலும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் செப்டம்பரில் தொடங்கும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் படமானது 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ