spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சூர்யா 46' படத்தின் சூப்பர் அப்டேட்!

‘சூர்யா 46’ படத்தின் சூப்பர் அப்டேட்!

-

- Advertisement -

சூர்யா 46 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'சூர்யா 46' படத்தின் சூப்பர் அப்டேட்!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதேசமயம் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விடும் எனவும் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வரும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தவிர சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும், அந்த படமானது சூர்யாவின் 46 வது படமாக உருவாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் சூர்யா ஏற்கனவே அறிவித்திருக்கிறார். 'சூர்யா 46' படத்தின் சூப்பர் அப்டேட்!மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அது மட்டும் இல்லாமல் விஜய் தேவர கொண்டாவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் மிக விரைவில் இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ