Homeசெய்திகள்சினிமாவிரைவில் நிறைவு பெறும் தனுஷின் D50....... முக்கிய அப்டேட்!

விரைவில் நிறைவு பெறும் தனுஷின் D50……. முக்கிய அப்டேட்!

-

தனுஷ் தனது கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு D50 படத்தை இயக்குகிறார் தனுஷ்.
இதில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பால முரளி, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். வட சென்னையில் நடைபெறும் கேங்ஸ்டர் சம்பந்தமான கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரே கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்து விடும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ