- Advertisement -
நடிகர் வடிவேலுவின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(எ) பாப்பா 87 வயதான அவர் உடல்நல குறைவு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருடைய அண்ணன் மு.க.அழகிரி நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.