உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வடிவேலு இதுவரை பாத்திராத சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பகத் பாஸில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பைஎகிறச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இடம் பெற்ற காட்சிகள் மிரட்டலாக உள்ளன.
வடிவேலும் எதிர்பார்த்தது போலவே தலைமை குணம் கொண்ட சீறியஸ் ஆன கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இறுதிக் காட்சியில் கையில் துப்பாக்கியுடன் அவரைப் பார்த்த போது இத்தனை நாள் நம்மை சிரிக்க வைத்த வடிவேலுவா இது என்று வியக்க வைக்கிறது.
படம் நிச்சயமாக பேசுபொருளாக அமையும் என்பது உறுதி!