Homeசெய்திகள்சினிமாவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி'.... ட்ரைலர் குறித்த அப்டேட்!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’…. ட்ரைலர் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

விஷால், ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், ரித்துவர்மா, அபிநயா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஷால் மூன்று தோற்றத்தில் நடித்துள்ளார்.மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மாஸ் கேங்ஸ்டர் கதைக்களத்தில்  உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் மூன்று பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ