spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபுல் எனர்ஜியில் அதிர வைத்த டி ஆர்..... 'மார்க் ஆண்டனி' ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது!

ஃபுல் எனர்ஜியில் அதிர வைத்த டி ஆர்….. ‘மார்க் ஆண்டனி’ ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது!

-

- Advertisement -

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி உள்ளது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

we-r-hiring

இவர்களுடன் சுனில், செல்வராகவன், ரித்து வர்மா, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ‘அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே’ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை ஆதிக் ரவிச்சந்திரனும் அசல் கோளாரும் இணைந்து எழுதியுள்ளனர். டி ராஜேந்தர் பாடலை ஹை பிச்சில் தனது கர்ஜிக்கும் குரலில் ஃபுல் எனர்ஜியுடன் பாடியுள்ளார். பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ