spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ரிலீஸ் தேதி அப்டேட்!

அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

நடிகை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, நிசப்தம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் போலீஸ் ஷெட்டி நடித்துள்ளார்.

இந்தப் படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்றும் ரதன் இசையமைத்துள்ளார்.

we-r-hiring

இப்படம் காதல் காமெடி கதை களத்தில் உருவாகியுள்ளது. மேலும் உணவை மையமாக கொண்டு பேசப்படும் இந்த படத்தில் அனுஷ்கா சமையல் கலைஞராக நடித்துள்ளார்.

கடந்த மே மாதம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ