‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, நிசப்தம் போன்ற திரைப்படங்களுக்கு அடுத்து ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் நவீன் பொலிஷெட்டியும் நடித்துள்ளார்.

தெலுங்கில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை இயக்குனர் மகேஷ் பாபு இயக்கி வருகிறார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார்.

இந்தப் படம் காதல் காமெடி கதை களத்தில் உருவாக்கப்படுகிறது.
மேலும் உணவை மையமாக கொண்டு பேசப்படும் இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலைஞராக நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘என்னடா நடக்குது’ எனத் தொடங்கும் இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

மேலும் தனுஷின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி‘ படத்தில் தனுஷ் பாடியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


