அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் பாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகை. டாப் ஹீரோக்களுக்கு இணையாக படங்களில் மாஸ் கதாபாத்திரங்களில் நடிக்க அனுஷ்காவினால் மட்டுமே முடியும்.

அனுஷ்கா இளம் ஹீரோ நவீன் பொலிஷெட்டி உடன் அனுஷ்கா இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தை யு.வி.கிரேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 40 மற்றும் 25 வயதிற்குட்பட்ட இரண்டு பேருக்கு இடையிலான காதல் கதை இந்தப் படம். அனுஷ்கா இந்தப் படத்தில் செப் ஆக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. படத்திற்கு மிஸ் ஷெட்டி மிசஸ் பொலிசிட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் புதிய பாடல் பாட இருப்பதாகக் கூறப்படுகிறது. பாடகர் தனுஷுக்கு ஏராளனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய குரலில் வெளியாகும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடைசியாக தனுஷ் இளையராஜா இசையில் விடுதலை படத்தில் உன் கூட நடந்தா பாடலைப் பாடியிருந்தார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்திலும் பனங்கள்ளா பாடலை தனுஷ் பாடியிருந்தார்.
தற்போது இரண்டாவது முறை அனுஷ்காவுக்காக தனுஷ் பாட இருக்கிறார்.