spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளை நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... ரஜினிக்கு அழைப்பு!

நாளை நடைபெறும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை….. ரஜினிக்கு அழைப்பு!

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாளை நடைபெறும் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை..... ரஜினிக்கு அழைப்பு!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவரது இயக்கத்தில் தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சுந்தர். சி, நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தின் பூஜை நாளை (மார்ச் 6) பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. எனவே இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பிரம்மாண்ட பூஜைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ