சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் டீஸர் அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடித்த முடித்த திரைப்படம் அயலான்.

இத்திரைப்படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். 24 ஏ எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள உருவாகி வரும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அயலான் டீசர் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.


