நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆன போதிலும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. படத்திற்கு அதிகம் கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் தான் இவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது.
4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் – ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனுடன் சிவகார்த்திகேயன் ஏலியன் உடன் இருக்கும் அசத்தல் போஸ்டரும் வெளியாகியுள்ளது.