Homeசெய்திகள்சினிமா'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்!

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் கடந்த 2021 இல் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய அடுத்ததாக சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார் ஆர்யா.'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்! இதற்கிடையில் ஆர்யா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மிஸ்டர் ரியாக்ஷ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிகர் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சரத்குமார், மஞ்சு வாரியர் போன்றவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்!இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் மொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்தன. 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்!மேலும் இந்த படமானது விரைவில் வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ