spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலில் பட்டைய கிளப்பும் நானி நடிப்பில் வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை'!

வசூலில் பட்டைய கிளப்பும் நானி நடிப்பில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’!

-

- Advertisement -

நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.வசூலில் பட்டைய கிளப்பும் நானி நடிப்பில் வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை'!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நானி நடிப்பில் உருவாகியுள்ள சூர்யாவின் சனிக்கிழமை எனும் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தெலுங்கில் இந்த படத்திற்கு சரிபோதா சனிவாரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள நிலையில் டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜி முரளி இதன் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து சாய்குமார் மற்றும் பலர் நடித்து மேலும் சாய்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பட்டைய கிளப்பி வருகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ