spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் நானி நடிப்பில் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக சீதாராமம் பட நாயகி மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் நானி சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த படத்திற்கு சரிபோதா சனிவாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! நானியின் 31வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். ஆர் ஆர் படத்தை தயாரித்த டி வி வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நானி, பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக்சன் கலந்த கதைகளத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு இருந்தனர். நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானியின் முந்தைய படங்களை போல் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ