spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"சூப்பர் ஸ்டாரை அடுத்து உலக நாயகனுடன் இணையும் நெல்சன்!

“சூப்பர் ஸ்டாரை அடுத்து உலக நாயகனுடன் இணையும் நெல்சன்!

-

- Advertisement -

இயக்குனர் நெல்சன், ரஜினிக்கு பிறகு கமலுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெல்சன் திலிப் குமார், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ரப், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

we-r-hiring

‘ஜெய்லர்’ படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. எனவே படத்தின் இறுதி கட்ட பணிகளில் நெல்சன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி தனுஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்துவிட்டு நெல்சனின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தனுஷ் – நெல்சன் இணையும் இப்புதிய திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஏற்கனவே கமல்ஹாசனின் தயாரிப்பில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் உள்ள நிலையில் தற்போது தனுஷின் படமும் இணைய இருக்கிறது என்றும் விரைவில் இது சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ