- Advertisement -
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பணத்தை தானம் செய்ய NORTHERN UNI நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய சினிமாவில் இசை உலகில் அசத்தும் இசை அமைப்பாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இசைக்கச்சேரிகள் நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், தமன்னா, மிர்ச்சி சிவா, யோகி பாபு, சாண்டி, தொகுப்பாளினி டிடி, ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
