பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே
- Advertisement -

சர்ச்சைகளுக்கு குறைவு இல்லாமல் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்குபவர் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர், தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அவர் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதன்பிறகு தனக்கென தனி இணையதளத்தை ஏற்படுத்தி அதில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அண்மையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தான் நலமுடன் இருப்பதாக அவரது பக்கத்தில் மீண்டும் பதிவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பூனம் பாண்டேவின் குளியலறை வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், தனது முன்னாள் காதலர் தனக்கே தெரியாமல் வீடியோவை இணையத்தில் வௌியிட்டிருப்பதாக பூனம் குற்றம் சாட்டியிருக்கிறார்.