பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898AD படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நிலையில் தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருந்த கல்கி 2898AD திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். நாக் அஸ்வின் படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மகாபாரதத்தை தழுவி சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கல்கி 2898AD திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.