spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஒரு போரின் அர்த்தத்தை மாற்றிய மனிதன்.... பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

ஒரு போரின் அர்த்தத்தை மாற்றிய மனிதன்…. பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.ஒரு போரின் அர்த்தத்தை மாற்றிய மனிதன்.... பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898AD ஆகிய படங்களும் வசூல் வேட்டை நடத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவருடைய ‘தி ராஜாசாப்’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2898AD – 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் ‘சீதாராமம்’ படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
ஒரு போரின் அர்த்தத்தை மாற்றிய மனிதன்.... பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.அந்த போஸ்டரில் Most Wanted Since 1939 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவோ அல்லது பிரிட்டிஷ் காலகட்டத்தில் ரகசிய வீரராகவோ நடித்திருப்பார் போல் தெரிகிறது. அடுத்தது நாளை (அக்டோபர் 23) இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்க சுதீப் சாட்டர்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ