சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் பல படங்களில் நடித்த விஜய் தற்போது அவருடனே இணைந்து நடிக்கிறார். இதையடுத்து அவர் மேலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். டிரான்ஸ்மீடியா நிறுவனம் படத்தை வழங்குகிிறது. சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வரும் அவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
மேலும், இப்படத்தில் யாஷிகா ஆனந்த், யோகி பாபு, கிங்ஸ்லி, அபிராமி, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு விநாயக மூர்த்தி இசை அமைக்கிறார். இந்நிலையில், பிரபு தேவாவும், மடோனா செபாஸ்டியனும் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.