Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்.... ரூ. 100 கோடி வசூலை டார்கெட் செய்யும் 'டிராகன்'!

தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்…. ரூ. 100 கோடி வசூலை டார்கெட் செய்யும் ‘டிராகன்’!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்.... ரூ. 100 கோடி வசூலை டார்கெட் செய்யும் 'டிராகன்'!

லவ் டுடே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் டிராகன். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்.... ரூ. 100 கோடி வசூலை டார்கெட் செய்யும் 'டிராகன்'!லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் கயடு லோஹர், மிஸ்கின், கௌதம் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படம் தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது.தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்.... ரூ. 100 கோடி வசூலை டார்கெட் செய்யும் 'டிராகன்'! அதன்படி இப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இப்படம் நாளொன்றுக்கு குறைந்தது ரூ.8 கோடி வரை வசூல் செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. எனவே இந்த வார இறுதிக்குள் நிச்சயம் இப்படம் உலக அளவில் ரூ. 75 கோடியை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ