Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன்... ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ...

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன்… ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ…

-

ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் . அடுத்து தான் இயக்கி கதாநாயகனாக நடித்த லவ் டுடே படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். லவ் டுடே படம் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இவர் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிராகன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லவ் டுடே திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதனால் அதே நவம்பரில் டிராகன் படத்தையும் வெளியிட உள்ளனராம்.

MUST READ