Homeசெய்திகள்சினிமாவரவேற்பை பெறும் பிரேமலு... தெலுங்கு நட்சத்திரங்கள் பாராட்டு...

வரவேற்பை பெறும் பிரேமலு… தெலுங்கு நட்சத்திரங்கள் பாராட்டு…

-

மோலிவுட் திரையுலகில் இருந்து, கடந்த சில மாதங்களாக வெளியாகும் அனைத்து படங்களுமே பல மொழிகளில் ஹிட் அடிக்கின்றன. மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் மோகன்லால் நடித்த பிரம்மயுகம், மமிதா நடித்த பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களும் அடங்கும்.

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் வௌியான திரைப்படம் பிரேமலு. இதில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 3 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானது. ஆனால், இத்திரைப்படம் தற்போது 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள மொழியில் மட்டும் வெளியான இத்திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படம், கடந்த 8-ம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் தெலுங்கிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தை பார்த்த பிரபல நடிகர் மகேஷ் பாபு, இத்திரைப்படத்தை பாராட்டி, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதில், இறுதியாக இந்த அளவு எப்போது சிரித்தேன் என்று கூட தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதேபோல, பிரபல இயக்குநர் ராஜமௌலியும் பிரேமலு படத்தையும், அதில் நடித்துள்ள நடிககர், நடிகைகளையும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

MUST READ