பிரியங்கா சோப்ரா கழுத்தில் வெட்டு… ரசிகர்கள் அதிர்ச்சி…
- Advertisement -
மாடல் அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார். இதைத் தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்த அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். இதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். அனைத்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்று வசூலை குவித்ததை அடுத்து குறுகிய நாட்களிலேயே அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உச்சம் தொட்ட பிரியங்கா சோப்ரா, பிரபல ஆங்கிலப் பாடகர் நிக்ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன பிரியங்கா தொடர்ந்து ஆங்கிலத் தொடர்களிலும், ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்தார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ராவின் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.