spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்... பிரம்மாண்டம் காட்ட தயாராகும் படக்குழு!

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்… பிரம்மாண்டம் காட்ட தயாராகும் படக்குழு!

-

- Advertisement -

பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ‘ப்ராஜெக்ட் கே‘ திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும் கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இவர்களுடன் தீபிகா படுகோன், அமிதாபச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார்.

we-r-hiring

அறிவியல் புனை கதையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழாவை அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ