spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து

படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து

-

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.

தெலுங்கில் பிரபாஸூடன் இணைந்து நடிக்கும் அமிதாப்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் தற்போது தெலுங்கில் உருவாகும் ‘PROJECT K’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார்.

we-r-hiring
ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விபத்து

பிரபாஸ் நடிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த சண்டை காட்சியில் நடித்தபோது அமிதாப்பச்சனுக்கு விபத்து ஏற்பட்டு முதுகு பகுதியில் அடிப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மும்பையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இதுகுறித்து தன்னுடைய இணையதள பக்கத்திலும் (Web site) அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ளார்.

MUST READ