spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராஜமௌலி - மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா?

ராஜமௌலி – மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா?

-

- Advertisement -

ராஜமௌலி – மகேஷ் பாபு காம்போவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.ராஜமௌலி - மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா?

தெலுங்கு திரை உலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. அந்த வகையில் இவரை பலரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கின்றனர். இவருடைய இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து இமாலய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.ராஜமௌலி - மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா? ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி ஒடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் வருகின்ற நவம்பர் மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் இந்த படத்திற்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நவம்பர் மாதம் 11ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.ராஜமௌலி - மகேஷ் பாபுவின் புதிய பட டைட்டில் ரிலீஸ் இந்த தேதியில் தானா? அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் இதற்காக ஒரு நிகழ்வை நடத்த இருப்பதாகவும் அந்த நிகழ்வில் இந்த படத்தின் தலைப்புக்கான வீடியோவை வெளியிட இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

MUST READ