Homeசெய்திகள்சினிமாவேட்டையன் புதிய போஸ்டர்... வெளியானது அறிவிப்பு...

வேட்டையன் புதிய போஸ்டர்… வெளியானது அறிவிப்பு…

-

- Advertisement -
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்தது. ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாகும். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ரஜினியுடன், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. அடுத்து நெல்லை, மும்பை, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது புதுச்சேரியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், நாளை தை திருநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ